வீடியோ; பேட்ஸ்மேனாக மாறிய பவுலர் ; பா..! இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா ? Northamptonshire அணியை திணறடித்து இந்திய வீரர் இவர் தான் ;

டெஸ்ட் போட்டி :

ஐந்தாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை முதல் இன்னிங்ஸ் விளையாடிய முடிந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை 25 ஓவர் நடந்து முடிந்த நிலையில் 125 அடித்த நிலையில் 3 விக்கெட்டையும் இழந்துள்ளது.

Northamptonshire அணிக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் :

நேற்று மதியம் 2:30 மணியளவில் தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கோப் தலைமையிலான Northamptonshire அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற Northamptonshire முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில்களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் 0 மற்றும் இஷான் கிஷான் 16 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்த காரணத்தால் சரியான ரன்கள் இல்லாமல் இந்திய அணி தவித்தது. இருப்பினும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்து கொண்டே வந்தனர்.

இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 149 ரன்களை அடித்தனர். பின்பு 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது Northamptonshire அணி. இந்தியா கிரிக்கெட் அணியை போலவே பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்துக்கொண்டு விளையாடினர்.

19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்த நிலையில் 139 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் இந்திய அணி வென்றதற்கு முக்கியமான காரணம் ஒரே வீரர் தான். ஆமாம் இந்திய அணிக்கு ரன்கள் இல்லாத நேரத்தில் ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார் ஹர்ஷல்.

36 பந்தில் 54 ரன்களை அடித்துள்ளார். அதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் விளாசியுள்ளார். ஒருஐவேளை ஹர்ஷல் பட்டேல் 54 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் 100 ரன்களை அடித்திருக்குமா ? இந்திய அணி ? ஜூலை 7ஆம் தேதி முதல் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதனால் அனைத்து வீரர்களும் தீவிரமான பயிற்சியில் இடப்பட்டு வருகின்றனர். ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவருக்கு ப்ளேயிங்-11 ல் வாய்ப்பு கிடைக்குமா ? என்பது சந்தேகம் தான்..!