வீடியோ ; stump-ல் பந்து பட்டும் அவுட் இல்லையா ? நூலிழையில் தப்பியது ராயுடு விக்கெட் ; நடந்தது இதுதான் ;

ஐபிஎல் 2022 : போட்டி 1: ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆமாம், தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் கான்வே எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ருதுராஜ் கெய்க்வாட் 0 மற்றும் கான்வே 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து பார்ட்னெர்ஷிப் இல்லாமல் விளையாடிய வந்த சென்னை அணி. ஆனால் முன்னாள் கேப்டனும் புதிய கேப்டன் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 131 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட்டை இழந்துள்ளது சென்னை.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் 0, டேவன் கான்வே 3, ராபின் உத்தப்பா 28, அம்பதி ராயுடு 15, ஷிவம் துபே 3, ரவீந்திர ஜடேஜா 26, மகேந்திர சிங் தோனி 50 போன்ற ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது கொல்கத்தா அணி ரன்கள் 132 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

முதல் பவர் ப்ளேயில் விக்கெட்டை கைப்பற்றி வெற்றியை கைப்பற்றுமா சென்னை அணி ?

இதற்கிடையில் 5 வது ஓவரில் பவுலிங் செய்தார் கொல்கத்தா வீரர் வருணச்சக்ரவத்தி அதனை எதிர்கொண்டார் அம்பதி ராயுடு. அப்பொழுது எதிர்பாராத விதமாக பந்து ஸ்டம்ப் -ல் அடித்த படி பவுண்டரி சென்றது. அதில் ஸ்டம்ப்-ல் மிகவும் சிறிய அதிர்வு ஏற்பட்டதால் பைய்ஸ் விழுகவில்லை.

அதனால் அம்பதி ராயுடு விக்கெட் தப்பியது. ஆனால் அடுத்த சில ஒவேரில் ரன் -அவுட் ஆனார் அம்பதி ராயுடு என்பது குறிப்பிடத்தக்கது.