எனக்கு சில பொறுப்புகள் உள்ளன, அதனை நான் சரியாக என்பதே என்னுடைய குறிக்கோள் ; ருதுராஜ் கெயக்வாட் பேட்டி ;

0

ஐபிஎல் 2022 : இன்றைய முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்த முறை மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்த உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் 27 போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

அதில் அதிகபட்சமாக சென்னை அணி 17 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 8 போட்டிகளிலும் , இன்னொரு போட்டியில் எந்த முடிவும் இல்லை. இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் மெகா ஏலம் நடந்து முடிந்துள்ளது. அதனால் வருகின்ற சில போட்டிகளை வைத்து தான் வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் ..! எந்த அணிக்கு யார் பலமாக உள்ளார்கள் என்பது தெரியவரும்.

போட்டிக்கு முன்பு அளித்த சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் ; கடந்த ஆண்டை விட இப்பொழுது ஒன்று எனக்கு பெரிய மாற்றம் தெரியவில்லை. கடந்த ஆண்டு மாதிரி தான் இந்த முறையும் எனக்கு சில பொறுப்புகள் உள்ளது, அதனை நான் சரியாக செய்ய வேண்டும்.

ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக பல சவால்களை எதிர்கொண்டு விளையாட வேண்டும். ஒரு அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தால் தான் அணியின் ரன்களை உயர்த்த முடியும். அதுவும் இந்த முறை ரவீந்திர ஜடேஜா கேப்டனாக வழிநடத்த உள்ளார். அவரது கேப்டன்ஷி பார்க்க நான் ஆவலோடு இருக்கின்றேன்.

இன்றைய போட்டியில் நாங்கள் எதிர்கொள்ளும் அணி கொல்கத்தா. அது சென்னை , மும்பை அணியை தாண்டி கொல்கத்தா அணியும் வெற்றிகரமான அணிதான். அதனை ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்த போகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நட்சத்திர வீரரான ரசல், நரேன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, மும்பைக்காரர் (ஷ்ரேயாஸ் ஐயர்)எப்பொழுது ஒரு படி மேலே தான் யோசிப்பார். ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் சிறப்பாக விளையாடினால் நிச்சயமாக இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பலமாக இருக்கும் என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

இன்றைய முதல் ஐபிஎல் 2022 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் எதிர்பாராத விதமாக 4 பந்தில் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here