வீடியோ ; மறுபடியும் கேப்டனாக மாறினார் விராட்கோலி ; ரோஹித் ஷர்மாவிடம் விராட்கோலி சொன்னது இதுதான் ;

இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கியது பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ஆமாம்..! முதல் 20 ஓவரில் முக்கியமான 4 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. பின்னர் பொறுமையாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன்களை மட்டுமே அடித்தது.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. சில மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இஷான் கிஷான், விராட்கோலி, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆனால் 28 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி 178 ரன்களை அடித்து முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதில் ரோஹித் சர்மா 60, இஷான் கிஷான் 28, விராட்கோலி 8, ரிஷாப் பண்ட் 11, சூர்யகுமார் யாதவ் 34, தீபக் ஹூடா 26 ரன்களை அடித்துள்ளனர்.

1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில், இந்திய அணி பவுலிங் செய்த 19வது ஓவர் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் வீசினார். அதனை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன் பூரான் -ன் LBW என்பதை இந்திய வீரர்கள் உறுதியாக இருந்தனர்.

ஆனால் அதற்கு அம்பையர் அவுட் கொடுக்கவில்லை. இது 100 சதவீதம் விக்கெட் என்பதை தெரிந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி அதனை ரோஹித் ஷர்மாவிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் ரோஹித் சர்மா ரீவ்யூ கேட்டார். அப்பொழுது அதனை தெளிவாக பார்த்த டிவி நடுவர் அது அவுட் என்பதை அறிவித்தார்.

என்னதான் கேப்டன் பதிவியில் இருந்து விலகினாலும், ரோஹித் ஷர்மாவுக்கு இப்பொழுது உதவியாக மாறியுள்ளார் விராட்கோலி. அதன் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;