விராட் கோலி ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு …! அவரை இந்த மாதிரி பண்ண சொல்லுங்க ; சேவாக் அதிரடி பேட்டி..!

இந்த ஆண்டு ஐபிஎல் 2021, ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்த அதிரடியான வீரரை ஏன் இன்னும் அணியில் விளையாட விடவில்லை…??

ஐபிஎல் 2021, டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , ஆறாவது இடத்தில் பஞ்சாப் கின்ஸ்க் அணியும் உள்ளது.

இன்று 30வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை 27 போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் 13 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 14 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விரேந்தர சேவாக் ; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பற்றி சில முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் சமீபத்தில் நடந்த போட்டியில் பெங்களூர் அணி , பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றுள்ளது.

அதனை பற்றி பேசியுள்ள சேவாக்; பெங்களூர் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மாற வேண்டும். தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் விராட் கோலி அவரது 3வது பேட்டிங் இடத்துக்கு போக வேண்டும்.

அதே போல, ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர் முகமது அசாருதீன் ஒபெநிங் செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஜனவரி மாதத்தில் நடந்த syed Mushtaq Ali போட்டியில் 37 பந்தில் சதம் அடித்துள்ளார். அதனால் நிச்சியமாக நல்ல ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக  எதிர்பார்க்க படுகிறது.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது அசாருதீன் மற்றும் 3வது இடத்தில் விராட் கோலி , 4வது இடத்தில் மேக்ஸ்வெல் மற்றும் 5வைத்து இடத்தில் டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.