விராட்கோலி-க்கு சில வருத்தங்கள் உள்ளன ; அதுவும் இவர் மேலதான் வருத்தம் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல் இதோ ;

இந்திய அணியின் டெஸ்ட் அணியை விராட்கோலிக்கு பிறகு வழிநடத்த கூடிய தகுதி ரோஹித் ஷர்மாவிடம் மட்டுமே உள்ளது. ஆனால் இன்னும் பிசிசிஐ அதனை அதிகார்வப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையில், ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை உள்ளது,

என்று சமூகவலைத்தளங்களில் பல கருத்துக்கள் வெளியானது. அது உண்மையா இல்லையா என்பது தெளிவான செய்தி எதுவும் வெளியாகவில்லை. அதுவும் இப்பொழுது விரட்க்ளி ஒரு ப்ளேயர் ஆகவும் ரோஹித் சர்மா கேப்டனாகவும் விளையாட போகிறார்கள். அதனால் இதனை செய்தே ஆகா வேண்டும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சபா கரீம் கூறியுள்ளார்.

விராட்கோலியை பற்றி கூறுகையில் ; இனிமேல் வரும் போட்டிகளில் விராட்கோலி அதிக உழைப்பை கொடுக்க வேண்டும். நிச்சியமாக விராட்கோலிக்கு சில வருத்தங்கள் இருக்கும். ஆனால் அந்த காயங்கள் சரியாக சில நேரங்கள் எடுத்துக்கொள்ளும். விராட்கோலி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர்.

அதனால் அவருக்கு இதனை எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனை அனைவரும் மைதானத்தில் பார்க்க போகிறோம் என்று கூறியுள்ளார் சபா கரீம்.

மேலும் கேப்டன் பதவி பற்றி சில கேள்விகள் சபா க்ரீமிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கரீம் ; ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஒரு அடி முன்னேறி போக வேண்டும். அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் விராட்கோலி-யிடம் போட்டியின் செயல்முறையை சொல்ல வேண்டும்.

ரோஹித் சர்மா நினைக்கும்படி விராட்கோலியை அந்த பாதைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் இறுதியாக இந்திய அணியின் வெற்றியை மட்டுமே இருவரும் நினைக்க வேண்டும். இருவரும் ஒரே மாதிரி யோசனை செய்து விளையாடினால் அனைத்து விஷயங்களும் சரியாக நடக்கும்.

ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறந்த ஒரு சுற்று சூழல் ஏற்பட வேண்டுமென்றால், இவர்கள் இருவரும் (விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா) ஆகிய இருவரும் ஒன்றாக வேலை செய்தால் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சபா கரீம்.

வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது இந்திய அணி. அதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், விராட்கோலி ஒரு ப்ளேயர் ஆகவும் விளையாட உள்ளனர்…!