IND VS ENG 2021: நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் புனே மைதானத்தில் நாடன் முடிந்துள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் வீரர்கள் தொடக்கத்திலும் மற்றும் இறுதி ஓவர்களிலும் அதிரடியாக ஆடியுள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 329 ரன்களை எடுத்துள்ளனர்.
330 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பரிஸ்டோவ் 1 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களிலும் மாற்றும் ஜேசன் ராய் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.
இருந்தாலும் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் இறுதிவரை வரை போராடி ஆட்டம் இழக்காமல் 95 ரன்கள் எடுத்துள்ளார், இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் தொடரை கைப்பற்றியுள்ளது.
கடந்த மாதம் நடந்த, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
வீடியோ ; விராட் கோலி பறந்து பிடித்த கேட்ச் ; இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…!
நேற்று நடந்த போட்டி , ஏதோ உலகக்கோப்பைக்கான இறுதி போட்டி போல நடந்தது. ஏனென்றால் இறுதிவரை யார் வெல்லப்போகிறார்கள் என்று யாருக்குமே தெரியாத நிலை தான் இருந்தது. 40வது ஓவரில் இந்திய அணியின் பவுலர் தாகூர் வீசிய பந்தை இங்கிலாந்து அணியின் வீரர் ரஷீத் எதிர்கொண்டார். அப்பொழுது அவர் அடித்த பந்து விராட் கோலிக்கு கொஞ்சம் துரமாகத்தான் சென்றது.
இருந்தாலும் அதனை தாவி பிடித்து , ரஷீத் விக்கெட்டை கைப்பற்றினர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அதுவும் ஒரே கையில் பிடித்ததால், அவருக்கே அது ஆர்ச்சரியமாக தான் இருந்தது. விராட் கோலி பிடித்த கேட்ச் இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ: