தோனி ஐபிஎல் 2021 முடிந்த பிறகு ஓய்வு பெறப் போகிறாரா ?? அதிர்ச்சி தகவல்…!

0

ஐபிஎல் 2021; வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க போகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் மற்ற போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளில் பல விறுவிறுப்பாக போட்டிகள் நடக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மதத்தில் மகேந்திர சிங் தோனி அவரது ஓய்வு பற்றி தகவலை அவரது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். இவரை தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார்.

இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் தோனியை பார்க்க முடியாது என்று பலர் நினைத்து வேதனையாக இருந்துள்ளனர். இருந்தாலும் பரவவில்லை தோனியை மீண்டும் கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் பார்க்க முடியும் என்று நினைத்து பல கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களது மனதை சமாதானம் செய்தனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் வராமல் வெளியேறியது.

ஐபிஎல் வரலாற்றில் அதுவே முதல் முறை சிஎஸ்கே அணி ப்ளே -சுற்றுக்குள் போகாமல் வெளியேறியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். அதுமட்டுமின்றி 2020ஆம் ஐபிஎல் போட்டி தான் தோனியின் இறுதி ஐபிஎல் சீசன் ஆக இருக்கும் என்று பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் அளித்த பேட்டியில் ; தோனி நிச்சியமாக அடுத்த ஐபிஎல் 2021 போட்டியில் இருப்பர் என்று கூறி இருந்தார்.

அவர் சொன்னது போல இப்பொழுது தோனி சிஎஸ்கே அணியில் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் டோனியின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். இருந்தாலும் அடுத்த ஆண்டு நிச்சியம் தோனி ஐபிஎப் போட்டியில் இருந்து விலக அதிகம் வாய்ப்பு உள்ளது.

பிசிசிஐ அறிவித்த படி இந்த ஆண்டு மே மாதம், இன்னும் இரண்டு அணிகள் ஐபிஎல் போட்டியில் இடம்பெறும் என்று. அப்படி ஒருவேளை நடந்தால் நிச்சியமாக ஒரு ஒரு அணியிலும் மூன்று வீரர்கள் மட்டுமே தக்கவைக்க முடியும். சிஎஸ்கே அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவருக்கும் தான் அதிகம் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை நம்ம இடத்தை மற்ற வீரர்களுக்கு கொடுக்கலாம் என்று நினைத்து கூட ஐபிஎல் 2022யில் இருந்து விலக அதிகம் வாய்ப்பு உள்ளது, இதுவரை 13 ஆண்டுகாளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி அணியாக மாற்றியுள்ளார் தோனி. ஒருவேளை தோனி ஓய்வு பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here