வார்னரை கைப்பற்றிய அணி இதுதான் ; அப்போ கேப்டன் இல்லையா …! 6.25 கோடிக்கு ஏலம் போன வார்னர் இடம்பெற்ற அணி இதுதான் ;

0

ஐபிஎல் 2022 போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ஐபிஎல் ரசிகர்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய இரு அணிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்த முறை மெகா ஏலம் நடைபெற்று வருகிறது.

அதில் ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னரை. 6.25 கோடி ரூப்பைக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு 2021 வரை சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடி வருகிறார் வார்னர்.

அதிலும் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மற்றும் 2020, 2021 போன்ற நான்கு ஆண்டுகள் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார் டேவிட் வார்னர். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 8 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி வெறும் 1 போட்டியில் மட்டுமே வென்றது.

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தொடர் தோல்வியால் அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி, அணியின் ப்ளேயிங் 11ல் இருந்தும் வெளியேற்றினார்கள். இவருக்கு (வார்னர்)க்கு பதிலாக கென் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடிய வார்னர், 195 ரன்களை அடித்துள்ளார். அதில் சராசரியாக அவர் 24 ரன்களை 107 ஸ்ட்ரைக் ரேட் என்ற அடிப்படையில் அடித்துள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்த சில நாட்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.

அதில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் அதிரடியாக ரன்களை அடித்து ப்ளேயர் ஆஃப் சீரியஸ் விருதை பெற்றுள்ளார் டேவிட் வார்னர். ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டியில் 7 போட்டிகளில் விளையாடி சராசரியாக 48 ரன்களை அடித்து மொத்தம் 289 ரன்களை குவித்தார்.

அதில் மூன்று அரைசதம், 34 பவுண்டரி, 10 சிக்ஸர் மற்றும் அதிபட்சமாக 82 ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார் டேவிட். அதுமட்டுமின்றி நியூஸிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய இறுதி போட்டியில் 53 ரன்களை அடித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் டேவிட் வார்னர்.

ஐபிஎல் டி-20 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் ஐபிஎல் இரண்டாம் பாகம் நடைபெற்ற அதே இடத்தில் (ஐக்கிய அரபு அமீரகத்தில்) ரன்களை அடித்து வெற்றிக்கு காரணமாக விளையாடியுள்ளார் வார்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here