இந்த முறை கோப்பை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தான் போல ; அதிரடி வீரர்களை கைப்பற்றியுள்ள பஞ்சாப் அணி ; வீரர்கள் பட்டியல் இதோ ;

0

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

அதில் முதல் பாதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்களை கைப்பற்றியுள்ளது. அதனால் பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ஆமாம் இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ஆம் மட்டும் தான் இறுதி போட்டி வரை முன்னேறியது.

ஆனால் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் அணியில் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான இரு வீரர்களை கைப்பற்றியுள்ளனர்.

அதில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் தான். கடந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். அதில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 587 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஏலத்தில் ஷிகர் தவானை கைப்பற்ற டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் போட்டிபோட்டுக்கொண்டது.

ஆனால் இறுதி நேரத்தில் வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடி கொடுத்து அணியில் கைப்பற்றியுள்ளது பஞ்சாப். அதனால் நிச்சியமாக சிறப்பான கேப்டனாக மற்றுமின்றி சிறந்த ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவதாக சவுத் ஆப்பிரிக்கா வீரரான ராபடா தான் ;

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். இவருடைய பவுலிங் திறமை பற்றி அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. பஞ்சாப் கிங்ஸ் அணி 9.25 கோடி விலை கொடுத்து அணியில் கைப்பற்றியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அதனால் நிச்சியமாக ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஒரு சிறந்த பவுலர் அணியில் இருப்பது உறுதியானது. இந்த முறை ஆவது ஐபிஎல் கோப்பையை வெல்லுமா பஞ்சாப் கிங்ஸ் அணி ? ஷிகர் தவான் மற்றும் ராபாட அணியில் இடம்பெற்றதை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here