சிஎஸ்கே அணியில் இது எப்படி நடந்தது என்று தான் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை ; லட்சுமிபதி பாலாஜி .. என்னவாக இருக்கும் தெறியுமா..?

ஐபிஎல் 2021: கடந்த ஐபிஎல் 2021, ஏப்ரல் 9ஆம் த்தி முதல் ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2021 போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு :

மே மாதம் தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் பிசிசிஐ அறிவுரை படி கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வருன் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தோற்று இருப்பது உறுதியானது.

சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து அணிகளில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

அதனால் பிசிசிஐ, உடனடியாக அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வலி அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மீதமுள்ள போட்டிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் இந்த ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக இருந்த ஒரே விஷயம் என்றால் அது ஐபிஎல் 2021.

மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது நடைபெறும் ?

சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டியில்; வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு நாட்டில் மீதமுள்ள போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. ஒருவேளை மீதமுள்ள போட்டிகள் நடைபெறவில்லை என்றால் குறைந்தது 2500 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி இந்த விஷயம் எப்படி சிஎஸ்கே அணியில் நடந்தது என்று தான் இன்னும் தெறியாமல் இருக்கிறது :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒருவருக்கு தோற்று இருப்பது உறுதியானதால் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால் அவரால் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனக்கு இரண்டு முறையும் கொரோனா இருப்பது உறுதியானது.

அதனை எப்படி சொல்லுவது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் ஐபிஎல்லுக்கு வெளியில் பல மக்கள் தோற்று காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். எனக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹசி -வுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

எப்படி எங்கிருந்து எங்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை. சிஎஸ்கே அணி பலவிதமான பாதுகாப்பு விதிகளை நங்கள் பின்பற்றி கொண்டு இருந்தோம். ஆனால் எப்படி கொரோனா தோற்று ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை என்று சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி கூறியுள்ளார்.