ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் B ஐ சேர்ந்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. ஏனென்றால் இதுவரை இரு போட்டிகளில் விளையாடி அதிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
அதனால் இப்பொழுது புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்திய அணி. அதுமட்டுமின்றி, இந்த முறை அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா ?? என்று கேட்டால்..? அதற்கு பதில் சந்தேகம் தான்…! ஏனென்றால் குரூப் B சேர்ந்த பாகிஸ்தான் , நியூஸிலாந்து ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் தோல்வி என்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் மட்டுமின்றி, சிலரை கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களை பற்றி மோசமாக அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்….! அதனால் இந்திய வீரர்கள் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளனர்…!
இதற்கிடையே, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அளித்த பேட்டியில் ; எங்களுக்கு (இந்திய வீரர்கள்) கொஞ்சம் ஆவது ஓய்வு தேவை படுகிறது. ஏனென்றால் எங்களுக்கும் குடும்பம் உள்ளது. நங்கள் சுமார் 6 மாதங்கள் தொடர்ந்து விளையாடி கொண்டு வருகிறோம்.
அதுவும் கொரோனா என்பதால் எங்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளனர். அதுவே எங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் போட்டி விட்டால், நங்கள் எதை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பிசிசிஐ -யும் முடிந்தவரை எங்களுக்கு ஓய்வு கொடுத்து கொண்டு தான் வருகின்றனர்.
நாங்கள் முடிந்தவரை அனைத்தையும் செய்து கொண்டு வருகிறோம். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று பும்ரா கூறியுள்ளார்….! பும்ரா சொல்வது போல, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த சில மாதங்களாக விளையாடி கொண்டே இருக்கின்றனர்.
அவ்ருக்கு சில ஓய்வு நேரங்கள், குடும்பத்துடன் இருக்கவும் ஆசைப்படுவார்கள். இதனை புரிந்து கொள்ளாமல் இருக்கும் சிலர் அவரைகளை அப்ற்றி தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்…! கிரிக்கெட் போட்டி மட்டுமில்லை, எந்த ஒரு விளையாட்டை எடுத்தாலும் வெற்றியும் வரும் தோல்வியும் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்…!