இந்த காரணத்துக்கு தான் ஹார்திக் பாண்டியா மும்பை அணியில் பவுலிங் செய்யவில்லை….; அப்போ இனிமேல் பவுலிங் செய்யமாட்டாரா ?

இந்த காரணத்துக்கு தான் ஹார்திக் பாண்டியா மும்பை அணியில் பவுலிங் செய்யவில்லை….; அப்போ இனிமேல் பவுலிங் செய்யமாட்டாரா ?

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி ஏப்ரல் 9-ஆம் தேதி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டியில் வெறும் 17 ஓவர் மட்டுமே பவுலிங்கை செய்துள்ளார். அதிலும் சில முக்கியமான போட்டிகளிலும் பவுலிங் செய்யவில்லை. அதனால் இந்திய அணி சில முக்கியமான போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது.

அதேபோல.. இந்த ஆண்டு ஐபிஎல் 2021-யின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. அதில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மீண்டும் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டனர்.

அதில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அனால் இந்த இரு போட்டிகளிலும் ஹார்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஏன் அவர் பவுலிங் செய்யவில்லை?? இனிமேல் செய்யவே மாட்டாரா? என்று கேள்வியை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ; மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் – ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டையில் காயம் இருக்கிறது. ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான வீரர். அதனால் அவரை சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டும் செய்ய அறிவுத்தியுள்ளோம்.

அதனால் இன்னும் சில போட்டிகள் கழித்து அவர் பவுலிங் செய்வார் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார். ஏனென்றால் ஹார்திக் பாண்டியா பவுலிங் மிகவும் முக்கியமான ஒன்று. அவர் பேட்டிங் மட்டுமில்லாமல் பவுலிங்கில்லும் அவரது முக்கியமான பங்களிப்பு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.