அந்த நேரத்தில் அப்படி விளையாட வேண்டிய அவசியம் என்ன ? அதிரடியாக விளையாடிய ஒரே வீரரை குற்றம் சாட்டினார் கவாஸ்கர் ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்பொழுது தான் நடந்து முடிந்துள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. அதில் எந்த தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் ஆவது இந்திய அணி வென்று ஆறுதல் வெற்றி பெற்றது. ஆனால் கே.எல்.ராகுல் தலைமை தாங்கி வழிநடத்திய மூன்று ஒருநாள் போட்டியிலும் தோல்வியை மட்டுமே இந்திய அணி சந்தித்துள்ளது.

ஆமாம், முதல் இரு ஒரு போட்டிகளில் வென்ற தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. சரி மூன்றாவது போட்டியில் இந்திய அணி வென்றால் ஆறுதலாக இருக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். மூன்றாவது ஒருநாள் போட்டியில் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியது இந்திய அணி.

அதில் ஒருவர் தான் தீபக் சஹார், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹார் பவுலிங் செய்து முக்கியமான 2 விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர், பேட்டிங் செய்த தீபக் சஹார் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதிரடியாக விளையாடி 34 பந்தில் 54 ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

ஆனால் இறுதி நேரத்தில் ஆட்டம் இழந்த காரணத்தால் மீதமுள்ள பவுலர்களால் ரன்களை அடிக்க முடியவில்லை. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் அளித்த பேட்டியில் ;

கடைசியாக 10 ஓவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் தீபக் சஹார், அப்பொழுது இருந்த நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக தான் இருந்தது. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வந்தார். இறுதியாக 18 பந்தில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தன.

அந்த நேரத்தில் சிங்கிள்ஸ் எடுத்து போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் எதற்கு பிக் ஷாட் ? அடிக்க வேண்டும். நான் அவரை தவறாக சொல்லவில்லை. சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிக்க வேண்டிய நேரத்தில் அப்படி செய்தால் அது பிரச்சனை இல்லை.

ஆனால் மூன்றாவது போட்டியில் இறுதி நேரத்தில் தீபக் சஹார் செய்த தவறால் இந்திய அணிக்கான வெற்றி பறிபோனது. நான் அவரை குற்றம் கூறவில்லை. கிரிக்கெட் ரசிகர்களும் சிங்கிள்ஸ் அடித்து வெற்றி பெற்றால் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்து போட்டியில் வெற்றி பெற்றால் பெருமையுடன் பேசுவார்கள் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.