என்னதான் இருந்தாலும் விராட்கோலி இப்படி சொல்லிருக்க கூடாது ; அஜய் ஜடேஜா ; முழு விவரம் இதோ ;

0

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பல ஆண்டுகளாக தவம் இருந்த நடைபெற்ற போட்டி தான் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய அணி.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அதில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார்கள்…!!

போட்டி முடிந்த பிறகு விராட்கோலி போட்டியில் விளையாடியத்தை பற்றி அவரது கருத்தை பதிவு செய்தார். அதனை பற்றி பேசிய முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா அளித்த பேட்டியில்; விராட்கோலி இப்படி பேசுவார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் (விராட்கோலி) பேட்டி அளித்த போது ;

முதல் இரண்டு விடக்கெட்டை இழந்ததும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக மாறியது என்று. அதனை கேட்ட எனக்கு (அஜய் ஜடேஜா) மிகவுன் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு மிடில் ஆர்டரில் விராட்கோலி இருக்கிறார். அதனால் போட்டி இன்னும் முடியவில்லை. இதுதான் அணுகுமுறை ஆ?? எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார் அஜய் ஜடேஜா…!!

வருகின்ற 31 ஆம் தேதி அன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர். இதில் இந்திய அணி நிச்சியமாக வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் முதல் இரு இடங்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்படும்…!! என்ன செய்ய போகிறது இந்திய என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here