அஸ்வினுக்கு பதிலாக இவர் தான் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற போகிறார் ; முன்னாள் வீரர் உறுதி ;

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் :

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதுவும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற போகின்றனர். அதனால் அந்த பிட்ச்-க்கு ஏற்ப அணிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி ?

ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டியை நினைவில் வைத்து கொண்டு தான் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றனர். இருப்பினும் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ?

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி சிறந்த சூழல் பந்து வீச்சாளராகவும் விளையாடி வருகிறார் என்பது தான் உண்மை. ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை ?

அவ்வப்போது அணியில் இடம்பெறுகிறார், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. ஆனால் இப்பொழுது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இவருக்கு உலகக்கோப்பை போட்டிக்கான வாய்ப்பு இருக்குமா ?

ஐசிசி உலக கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலில், டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலர் மற்றும் சிறந்த ஆல் – ரவுண்டர்க்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் டி-20 போட்டிகளில் 51 வது இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடமில்லை.

அதனால் தான் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் பெயர் இடம்பெறவில்லையா ? இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஐசிசி டி-20 2022 போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில் ; “ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவாரா ? இல்லையா ? பெரிய குழப்பமாக உள்ளது.”

“அவரை எதற்கு அணியில் எடுத்தார்கள் ? ஏன் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. பின்பு இப்பொழுது தீடிரென்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டி-20 போட்டியில் விளையாடி வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்? இது நிச்சியமாக பலருக்கு குழப்பமாக தான் இருக்கும்.”.

“ஏனென்றால் இந்திய அணியின் முதல் ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா, பின்னர் சஹால், அக்சர் பட்டேல் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ஆல் – ரவுண்டராக விளையாடி வருகிறார். அதனை தவிர்த்து வேறு ஒன்னுமில்லை. ஆனால் எனக்கு யுஸ்வேந்திர சஹால் தான் அணியில் இடம்பெற வேண்டும், ஏனென்றால் அவர் வ்ரிஸ்ட் ஸ்பின்னர் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.”

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற போகின்ற போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? அல்லது அவருக்கு பதிலாக எந்த சுழல் பந்து வீச்சாளர் இடம்பெற வேண்டுமென்று கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!