இவர் தொடக்க வீரரா ? இவருக்கு எதுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க ? அவருக்கு பதிலாக சுப்மன் கில்-க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற தொடங்கியுள்ளது.

அதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலை 9:30 மணியளவில் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் விவரம் :

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது. குறிப்பாக நம்பிக்கை நாயகனாக திகழும் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தலா ஒரு ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ஒருசிலர் வீரர்கள் அவ்வப்போது ரன்களை அடித்தாலும் பார்ட்னெர்ஷிப் அமையாமல் விக்கெட்டை இழந்து கொண்டே சென்றது ஆஸ்திரேலியா அணி.

அதனால் 63.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 177 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி இப்பொழுது பேட்டிங் செய்து வருகின்றனர்.

24 ஓவர் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 1 விக்கெட்டை இழந்த நிலையில் 77 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடரும் பிரச்சனை :

பல போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் சரியான தொடக்க வீரர்கள் யார் என்று தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஆமாம், அதுமட்டுமின்றி திறமையான வீரர்களை காட்டிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கே.எல்.ராகுல் கடந்த சில போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி பெரிய அளவில் ரன்களை அடிப்பதில்லை என்பது தான் உண்மை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அதனால் தொடக்க வீரராக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தான் களமிறங்கி விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, ஏனென்றால் கே.எல்.ராகுல் வழக்கம் போல சிறப்பாக விளையாடாமல் 20 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கே.எல்.ராகுலை பற்றி சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் இளம் வீரரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கே.எல்.ராகுலை தொடக்க வீரராக விளையாடியது சரிய ? தவற ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here