எதிர்பார்கலைல ..! இந்திய அணியின் ஆல் – ரவுண்டரின் பவுலிங்கை பார்த்து மிரண்டு போன ஆஸ்திரேலியா வீரர்கள் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் நேற்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

இந்த முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை.

டேவிட் வார்னர் மற்றும் கவாஜா போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்த ஆஸ்திரேலியா அணி 63.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 177 ரன்களை அடித்தனர்.

அதில் வார்னர் 1, கவாஜா 1, லேபுஸ்சாக்னே 49, ஸ்டீவ் ஸ்மித் 37, ஹண்ட்ஸ்கோம் 31, அலெக்ஸ் காரே 36, பேட் கம்மின்ஸ் 6 ரன்களை அடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர்.

இதில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக தொடங்கிய முதல் இன்னிங்ஸ்-ல் முதல் நாள் முடிவில் 24 ஓவர் ஓவர் முடிந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 77 ரன்களை அடித்துள்ளது இந்திய. இன்னும் 100 ரன்கள் பின்னடைவில் இருக்கிறது இந்திய.

இதில் ரோஹித் சர்மா 56*, கே.எல்.ராகுல் 20 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 9 விக்கெட்டை மீதமுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி அதிகப்படியான ரன்களை முன்னிலையில் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பாக கம்பேக் கொடுத்த இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறினார் ரவீந்திர ஜடேஜா. பின்பு அதில் இருந்து பல போட்டிகளிலும், தொடர்களிலும் விளையாட முடியாத நிலைமை உருவானது.

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பவுலிங் செய்து ஆஸ்திரேலியா வீரர்களை திணறடித்துள்ளார். ஆமாம், ரவீந்திர ஜடேஜா 22 ஓவர் பவுலிங் செய்து அதிகபட்சமாக 5 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 47 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

ஜடேஜா கைப்பற்றிய வீரர்கள் அனைவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் – ரவுண்டர் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா விளையாடினால் சிறப்பாக இருக்குமா ? அல்லது அக்சர் பட்டேல் விளையாடினால் சிறப்பாக இருக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here