இரு மாற்றங்களுடன் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதுதான் ;

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நான்கு அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் இதற்கு மேல் நடக்க போகும் போட்டிகள் நிச்சியமாக சுவாரஷியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Indian Team

நாளை இரவு நடைபெற போட்டியில் மீண்டும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளனர். இதற்கு முன்பு லீக் போட்டிகளில் விளையாடிய போது இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளனர்.

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பவுலிங் வேற லெவல் தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஹாங் காங் வெறும் 38 ரன்களை அடித்த நிலையில் 10 விக்கெட்டையும் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. அதனால் நாளைய போட்டியும் இந்திய அணிக்கு கடினமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி தொடர்ந்து வெற்றியை கைப்பற்றினாலும், சில தவறுகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதனால் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் ஒரு சில மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதில் முக்கியமான மாற்றம் தொடக்க வீரர் தான். ஏனென்றால், கே.எல்.ராகுல் கடந்த இரு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, சூரியகுமார் யாதவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க ஆர்வகமாக தான் இருக்கிறது. அதனால் கே.எல்.ராகுல் இடத்தில் சூர்யாகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்கினால் நிச்சியமாக ரிஷாப் பண்ட் -க்கு மிடில் ஆர்டரில் விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கும்.

அதுமட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இடம்பெற்றுள்ளனர். அக்சர் பட்டேல் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்து வருவதால் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் அவருக்கு இடம் உறுதியாக தான் தெரிகிறது…!

இந்திய அணியின் விவரம் :

தொடக்க வீரர் : சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா

மிடில் ஆர்டர் : விராட்கோலி, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக்

ஆல் – ரவுண்டர்: ஹர்டிக் பாண்டிய மற்றும் அக்சர் பட்டேல்

பவுலர் : அர்ஷதீப் சிங், புவனேஸ்வர் குமார், ரவிபிஷானி அல்லது யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான்

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க எந்த எந்த வீரர்கள் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!