ருதுராஜ் இல்லை ; சுரேஷ் ரைனாவின் இடத்தை தட்டி சென்ற இளம் வீரர் ; கடுப்பில் இருக்கும் ரெய்னா ரசிகர்கள் ;

ஐபிஎல் 2022 : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 லீக் போட்டி வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் நடந்து முடிந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரும் சுரேஷ் ரெய்னா இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் இல்லாதது தான். ஆமாம், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆவது ஐபிஎல் டி-20 அறிமுகம் ஆன ஆண்டு முதல் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா இருந்ததால் சென்னை அணியின் மிடில் ஆர்டர் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த ஆண்டு அப்படி இல்லை சுரேஷ் ரைனாவின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.

பின்னர் அவருக்கு (சுரேஷ் ரெய்னா) முதுகில் காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம்பெற்றார். அந்த நேரத்தில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார் என்பது தான் உண்மை. இறுதி போட்டி வரை ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடியுள்ளார் என்பதே உண்மை.

பின்னர் பிசிசிஐ கூறிய படி இந்த முறை மெகா ஏலம் நடைபெறும் அதனால் நான்கு வீரர்களை அதிகபட்சமாக தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறினார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்களை தக்கவைத்தது சென்னை அணி.

அதில் சுரேஷ் ரெய்னா இல்லாதது அதிர்ச்சியாக தான் இருந்தது. இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் ஆவது சுரேஷ் ரெய்னா நிச்சியமாக ஏதாவது அணியில் இடம்பெறுவார் என்று பலர் நினைத்து கொண்டு வந்தனர். ஆனால் ஒரு அணியில் கூட இடம்பெறாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜேசன் ராய் இடம்பெற்றார். ஆனால் இப்பொழுது அவர் கொரோனா காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருக்கும் விதியை பின்பற்றுவது எனக்கு சிரமம், அதனால் நான் இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்று விலகினார் ஜேசன்.

அதனால் ஜேசன் ராய்-க்கு பதிலாக நிச்சியமாக சுரேஷ் ரெய்னா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெறுவார் என்று பலர் நினைத்து கொண்டு வந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், ஜேசன் ராய்-க்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஹமானுல்லாஹ் குர்பஸ் இடம்பெற்றுள்ளார்.

இவர் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது பவுலிங் செய்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இவர் தான் சிறந்த வீரர் என்று குஜராத் டைட்டன்ஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…!

கடந்த 2020 ஆம் ஆண்டில் கூட சுரேஷ் ரெய்னா தான் நான் ஐபிஎல் போட்டியில் சில குடும்ப பிரச்சனை காரணமாக விளையாடவில்லை என்று கூறினார். ஆனால் இந்த ஆண்டு தான் முதல்முறை சுரேஷ் ரெய்னா இல்லாதது. ரெய்னா ரசிகர்களுக்கு நிச்சியமாக வருத்தமாக தான் இருக்கும்..!

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!