அரையிறுதி பலப்பரிட்சை: பழிதீர்க்குமா நியூசிலாந்து அணி?? களமிறங்கும் உத்தேச 11 வீரர்கள் பட்டியல்!!

டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றில் முதல் கட்டமாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதவுள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 ஆட்டத்தில் புள்ளிகள் அடிப்படையில் குரூப்-1ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், குரூப்-2ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் அரையிறுதி சுற்றுக்குள் முன்னேறியுள்ளன.

நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் மோதுகின்றன. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜேசன் ராய் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது நியூசிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கிறது. இருப்பினும் அவரது இடத்திற்கு மாற்றுவீரர் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் துவக்க ஆட்டம் அனுபவமிக்க ஜானி பேர்ஸ்டோ அணியில் இடம் பெற்றிருப்பதால் அவரே அரையிறுதியில் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மிடில் ஓவர்களில் மற்றொரு அனுபவ வீரர் சாம் பில்லிங்ஸ் இடம் பெற்று விளையாடுவார் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் நன்றாக செயல்பட்டு வருகின்றனர்.

கடைசி ஓவர்களில் நன்றாக வீசும் வேகப்பந்து வீச்சாளர் தைமர் மில்ஸ் காயம் காரணமாக வெளியேறி இருப்பதால் அதுவும் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கிறது. அவரது இடத்தில் ஜோர்டான் ஆடலாம். சுழல்பந்து வீச்சில் ரஷீத் மற்றும் மொயின் அலி இருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை, இந்த தொடரில் சிறந்த பந்துவீச்சு அணியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக டிம் சவுதி மற்றும் டிரென்ட் போல்ட் இருவரும் எதிரணிக்கு அச்சுறுத்தலாகவே விளங்கி வருகின்றனர். அதேபோல் சுழல்பந்து வீச்சில் இஸ் சோதி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

மற்றொரு முனையில் மிச்சல் சான்டனர் பக்கபலமாக இருந்து வருகிறார். பேட்டிங்கில் கப்டில் மற்றும் கேன் வில்லியம்சன் நன்றாக செயல்பட்டு வந்தாலும் மிடில் ஆடர் சற்று கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. ஆகையால், அதனை சரி செய்யும் பட்சத்தில் நியூசிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் பலம்மிக்க அணியாக காணப்படுகிறது.

கணிக்கப்படும் இங்கிலாந்து அணி 

மோா்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லா், கிறிஸ் ஜோா்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.

கணிக்கப்படும் நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டெவன் கான்வே, மாா்டின் கப்டில், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னா், இஷ் சோதி, டிம் சௌதி, ஆடம் மில்னே.