2011 உலககோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சொன்ன அந்த மூன்று வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்று ; விராட்கோலி பேட்டி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் 2011ஆம் உலகக்கோப்பை போட்டியில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்றது மிகவும் முக்கியமான ஒன்று. தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், இலங்கை அணியும் மோதின. அதில் இலங்கை அணியை வென்று இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

அதில் தோனி 91, கவுதம் கம்பிர் 97, சேவாக் 0, சச்சின் 18 ரன்கள் அடித்தனர். இந்திய அணிகு 275 ரன் இலக்காக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக 6.1 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் அதனை தோனி , கம்பிர் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.

இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி கூறுகையில் ; ” எனக்கு தெரிந்த 20 ரன்கள் அடித்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தோம். அதன்பின்னர் நான் பேட்டிங் செய்ய போகும் போது எனக்கு அழுத்தம் ஏற்பட்டது.”

“அப்பொழுது சச்சின் திரும்ப வந்துகொண்டு இருந்த நிலையில் என்னிடம் சரியான பார்ட்னெர்ஷிப் செய்யுங்கள் என்று சச்சின் கூறினார். அதனால் நானும் கவுதம் கம்பிர் இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்தோம். அதில் நான் 35 ரன்களை அடித்தேன். அது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான ரன் ஆகும்.”

“35 ரன்களாக இருந்தாலும் அதனை உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் அடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. அதுவும் இறுதியாக உலகக்கோப்பையை வென்றது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த மக்கள் அனைவரும் வந்தே மாதரம் என்று சொன்னது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார் விராட்கோலி.”

மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த விராட்கோலி கேப்டனாக மாறினார். ஆனால் சமீபத்தில் பிசிசிஐ மற்றும் விராட்கோலிக்கு இடையே பல கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார் விராட்கோலி.

இப்பொழுது விராட்கோலியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியை ரோஹித் சர்மா சிறப்பாக வழிநடத்தி வருகிறார்..!