CSK அணியில் இவர் இன்னும் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை ; இப்படி பண்ண எப்படி சென்னை அணி வெல்லும் ? முன்னாள் வீரர் ஆவேசம் ;

இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் இருந்து இன்னும் சென்னை ரசிகர்கள் மீண்டு வரவில்லை. ஆமாம், இதுவரை சென்னை அணி விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. அதிலும் லக்னோ அணிக்கு எதிராக விளையாடி போட்டி பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஆமாம், டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அதிரடியான ஆட்டத்தை விளையாட தொடங்கினார். அதனால் 20 வது ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்தது சென்னை.

பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது லக்னோ அணி. இதில் சென்னை அணி போட்டியை வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் , சரியாக 19வது ஒவரில் 25 ரன்களை கொடுத்தது சென்னை அணி.

அதனால் லக்னோ அணிக்கு சுலபமாக மாறியது. இன்னும் வரை இந்த போட்டியின் நிகழ்வு பேசும்பொருளாக மாறியுள்ளது தான் உண்மை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், சென்னை அணி செய்த தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை பற்றி மேலும் பேசிய அவர் ” அவருக்கு (ஷிவம் துபே) கொடுக்கப்படும் போட்டிகளில் விளையாடி வருகிறார். இருப்பினும் பவுலிங் என்று வந்துவிட்டால் இன்னும் ஷிவம் துபே லென்த் பந்துகளை தான் வீசுகிறார். ஆனால் அதற்கு நிச்சியமாக தண்டனை பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.”

“அதுமட்டுமின்றி 19வது ஓவரில் அவருக்கு பவுலிங் கொடுத்தது, ஏதோ பவுலிங் தெரியாத பவுலருக்கு ஓவர் கொடுத்தது போல தான் இருந்தது. இறுதி நேரத்தில் லக்னோ பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வரும் நிலையில் அப்படி பவுலிங் செய்தது மிகவும் தவறான ஒன்று தான்.”

இது சென்னை அணிக்கு நன்கு தெரியும், இறுதி நேரத்தில் ரன்களை கொடுக்க போகிறது என்று. அதில் லென்த் பவுலிங் மற்றும் பேட்டிங் பிட்ச் இரண்டும் சேர்ந்து சென்னை அணிக்கு ஆபத்தாக மாறியது. இப்படி தான் நடக்க போகிறது என்றுய் தெரிந்து ஷிவம் துபே எதுவும் கற்றுக்கொள்ள வில்லை என்பது தான் அர்த்தம் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

சென்னை அணிக்கு ஷிவம் துபே தேவையா ? அல்லது பேட்டிங் மட்டும் செய்தால் போதுமா? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!