சென்னை அணியில் இருக்கும் தவறு இதுதான் ; இப்படி செய்தது சரியில்லை ; ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2022: ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது. இதுவரை 9 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்களை அடித்தனர்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய லக்னோ அணி 211 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது லக்னோ. இந்த போட்டியை பற்றி இன்னும் பேசிக்கொண்டே இருக்கின்றனர். அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டியது. ஆனால் 19வது ஓவரில் ஷிவம் துபே செய்த தவறால் சென்னை அணிக்கு மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் கூறுகையில் ; ” மொயின் அலி ஒரு ஓவர் மட்டுமே பவுலிங் செய்தார். ஆனால் அதிலும் லக்னோ பேட்ஸ்மேன்கள் 14 ரன்கள் அடித்துள்ளனர். ஒரு விக்கெட்டை அவ்வளவு சுலபம் இல்லை.”

“ஷிவம் துபே ஒரு சிறந்த பவுலர் தான். லெவிஸ் மற்றும் படோனி ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி கொண்டு இருக்கும் நேரத்தில், ஷிவம் துபே குழந்தைக்கு ஏதோ கேக் கொடுத்தது போல பவுலிங் செய்தார் ஷிவம் துபே. அதுமட்டுமின்றி, சென்னை அணி பீல்டிங் செய்து கொண்டு இருந்த நேரம் மிகவும் ஒரு பதற்றமான சூழல் உருவானது.”

“அதுமட்டுமின்றி, சென்னை அணி சில முக்கியமான கேட்ச் மிஸ் செய்துள்ளது. ப்ராவோ அதிக விக்கெட்டை கைப்பற்றுவார் என்று நினைத்தால், அது நடக்கவில்லை. அதேபோல தான் கேப்டன் ஜடேஜா இரு ஓவர் மட்டுமே பவுலிங் செய்தனர். ஆனால் அவர் (ஜடேஜா)நினைத்திருந்தால் ப்ராவோ 17 அல்லது 19வது ஓவரில் பவுலிங் செய்திருக்க வேண்டும்.”

“அப்படி செய்திருந்தால் நிச்சயமாக சென்னை அணிக்கு சில மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார் மேத்யூ ஹைடன். மேத்யூ ஹைடன் சொன்னது போல 19வது ஓவர் ப்ராவோ பவுலிங் செய்திருந்தால் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்திருக்குமா ?? இல்லையா ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here