இந்த கோரோன காலத்திலும் பல கட்டுப்படுகளுடன் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொண்டு இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா நாட்டிற்க்கு சென்றுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் டி 20, ஒரு நாள் போட்டி ,டெஸ்ட் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் 2 போட்டிகள் முடிந்த நிலையில் வருகின்ற 7ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதால் அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடிவு செய்த பிசிசிஐ, அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் விளையாடுவார் என்ற செய்தியையும் வெளியானது.
இதனால் நிச்சயமாக 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி நிச்சயம் என்று இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்தியா கிரிக்கெட் வீரர்கள் செய்த செயலால் 3வது டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கப்போகுது என்று பலர் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது…!
இந்தியா கிரிக்கெட் அணிக்கு நேர்ந்த சோகம்..! 3வது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக தோல்விதான்… காரணம் இதோ..!!
நேற்று இந்தியா கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, சைனி , ரிஷாப் பண்ட், சுமன் கில்,ப்ரிதிவ் ஷா போன்ற வீரர்கள் கோரோன விதிமுறைகளை மீறி தனியார் உணவகத்திற்கு சென்றுள்ளார். இச்செயலை யாரிடமும் முறையான அனுமதி பெறாமல் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் ஐந்து பேரையும் தனிமைப்படுத்தியுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் ஐந்து நபர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணியில் இவர்களுக்கு இடம் இருக்குமா? இருக்காதா?? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.