ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா நாட்டுக்கு கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொள்ள இந்தியா அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் டி20 , ஒரு போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அணியை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் தாள ஒரு போட்டிகள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கு இந்தியா அணி பலத்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஐபிஎல் 2020 போட்டிகளில் சுன்ரைஸ்சரஸ் ஹைதராபாத் அணியின் சிறப்பாக பௌலிங் செய்த நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுக்கு இந்தியா அணியில் விளையாட தேர்வானார். அவர் முதலில் களம் இறங்கிய டி20 போட்டியில் முக்கியமான விக்கெட்களைகைப்பற்றி இந்தியா அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார்.
நடராஜன் அவரது சிறப்பான ஆட்டத்தை வரும் போட்டிகளில் வெளிபடுத்துவார் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி நடராஜன் பௌலிங் மிகவும் கடினமாக உள்ளதாக பல வீரர்கள் கூறியுள்ளனர்.
உமேஷ் யாதவுக்கு பதிலாக களம் இறங்க போகும் இந்தியா வீரர் இவர் தான்… கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி.. யார் அந்த வீரர்?
உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதால் வரும் போட்டிகளில் உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் விளையாடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது அபாரமான பந்துவீச்சால் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது என்றே சொல்லலாம்.
அவர் இந்த ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் இரு டி20 போட்டிகளில் களம் இறங்கிய நடராஜன் 3 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜன் பௌலிங் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கக் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்பதே உண்மை.