இப்படி பவுலிங் செய்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் ; ரசிகர்கள் வருத்தம் ; அடுத்த போட்டியில் நடக்க போகும் முக்கியமான மாற்றம் இவர் தான் ;

ஆஸ்திரேலியா : இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை லீக் சுற்றுகள் நடைபெற்று முடிந்த நிலையில் இப்பொழுது சூப்பர் 12 அணிகளுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

போட்டி 16: இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதியுள்ளனர். இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை இந்த இரு அணிகளும் மொத்தம் 11 சர்வதேச டி-20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இந்திய கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 8 போட்டிகளில், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதனால் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆமாம், தொடக்க வீரரான பாபர் அசாம் மற்றும் அதிரடி மன்னன் ரிஸ்வான் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்தனர்.

ஆனால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த ஷான் மசூத் மற்றும் இப்பிடிகார் அஹமத் சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்துள்ளனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் 159 அணி ரன்களை அடித்துள்ளனர்.

அதில் முகமத் ரிஸ்வான் 4, பாபர் அசாம் 0, ஷான் மசூத் 52, அகமத் 51, ஷதாப் கான் 5, ஹைதர் அலி 2, முகமத் நவாஸ் 9, ஆசிப் அலி 2 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். இப்பொழுது 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க போகிறது இந்திய. பாகிஸ்தான் அணியை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ?

இந்த மைதானத்தில் சுழல் பந்து வீச்சாளரை விட வேகப்பந்து வீச்சாளருக்கு தான் பவுலிங் சாதகமாக அமைந்துள்ளது. ஆமாம், அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் அக்சர் பட்டேல். 12வது ஓவர் பவுலிங் செய்த அக்சர் பட்டேல் ஓவரில் 6,0,6,6,0,3 ரன்களை கொடுத்துள்ளார். ஒரு ஓவர் பவுலிங் செய்து 21 ரன்களை அதிகபட்சமாக விட்டுக்கொடுத்துள்ளார்.

இன்னும் இரு ஓவர் இதேபோல நடந்திருந்தால் நிச்சியமாக பாகிஸ்தான் அணியால் 200 ரன்களை சுலபமாக அடித்திருக்க முடியும். ஆனால் அக்சர் பட்டேலுக்கு மீண்டும் ஓவர் கொடுக்கப்படவில்லை. இனிவரும் போட்டிகளில் அக்சர் பட்டேலுக்கு ஓவர் கொடுக்கப்படவில்லை என்றால் ரிஷாப் பண்ட் அல்லது தீபக் ஹூடா போன்ற பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.