இவர் மேல் அதிகம் நம்பிக்கையும் அதிக பணமும் செலவிடப்பட்டுள்ளது, அதற்காவது இவர் விளையாடியே ஆக வேண்டும் ; கவுதம் கம்பிர் அதிரடி பேட்டி

இவர் மேல் அதிகம் நம்பிக்கையும் அதிக பணமும் செலவிடப்பட்டுள்ளது, அதற்காவது இவர் விளையாடியே ஆக வேண்டும் ; கவுதம் கம்பிர் அதிரடி பேட்டி.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த ஐபிஎல் 2021 அடுத்த மாதம் மே 30ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிகளுக்கு நிச்சியமாக எந்த பஞ்சமும் இல்லை. நேற்று நடந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்த நிலையில் 149 ரன்களை எடுத்துள்ளனர். அதில் விராட் கோலி 33 ரன்கள், படிக்கல் 11 ரன்கள், மேக்ஸ்வெல் 59 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

பின்பு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி இறுதிவரை போராடி 143 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 6 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி.

இதனை குறித்து பேசி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் கம்பிர் ; கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 பிறகு அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி, அவரை வெளியேற்றியது. அதனால் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் 14.25 கோடி ரூபாய்க்கு அணியில் எடுக்கப்பட்டார்.

அவரது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்தில் 39 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்ட போது 41 பந்தில் 59 ரன்களை எடுத்துள்ளார் மேக்ஸ்வெல்.

இவரது ஆட்டம் பெங்களூர் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவர் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இவரை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது (14.25 கோடி).

அதனால் இவர் நிச்சியமாக இவரது முழுமையான ஆட்டத்தை பெங்களூர் அணிக்காக விளையாடியே ஆக வேண்டும். சன்ரைசர்ஸ் ஐராபாத் அணிக்கு எதிரான போட்டி மிக அற்புதமாக விளையாடியுள்ளார். ரஷீத் கான் பந்தை சுலபமாக கையாண்டுள்ளார் மேக்ஸ்வெல். இறுதிவரை போராடியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளார் மேக்ஸ்வெல் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.