Jadeja-வை பார்த்து யாரும் இப்படியெல்லாம் பேசாதிங்க..! டுபலஸிஸ் அதிரடி பேட்டி..! முழு விவரம் இதோ..!

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 191 ரன்களை விளாசியுள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், ஜடேஜா 62 ரன்கள் மற்றும் தோனி 2 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி வரை போராடி 9 விக்கெட் இழந்த நிலையில் வெறும் 122 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் விராட் கோலி 8 ரன்களையும் தேவ்தத் படிக்கல் 34 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர் அனைவரும் தொடர்ந்து விக்கெட் இழந்ததால் தோல்வியை சந்தித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது இறுதி ஓவரில் ஜடேஜா 37 ரன்களை விளாசியுள்ளனர். அதனை பற்றி பேசிய சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டுப்ளஸிஸ் ; சாத்தியமா ஜடேஜாவின் ஆட்டம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகள் ஆரம்பித்த முதல் இப்பொழுது அவரை அவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங் செய்யும் முறை அதிகம் ஆயிட்டே வருகிறது. பெங்களூர் அணிக்கு எதிராக ஹர்ஷல் பட்டேல் பந்து வீசிய இறுதி ஓவரில் 37 ரன்களை அடித்து அதிரடியாக விளாசினார்.

அதனை எல்லாரும் எதிர்ச்சியாக பேட்டிங் செய்துவிட்டார் என்று பலர் கருத்தை கூறிவந்தனர். அதனை தவறு, அவர் எப்பொழுது பயிற்சி செய்யும்போது பல சிக்சர் அடிப்பார். அதன் வெளிப்பாடுதான் அது, அவரது அயராத உழைப்பால் மட்டுமே அவர் இவரு பேட்டிங் செய்துள்ளார் என்று கூறியுள்ளார் டுப்ளஸிஸ்.