CSK- அணியில் விளையாடவில்லை, இருந்தாலும்; மக்களுக்காக இவர் செஞ்ச செயலால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்…!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் கடந்த மாதம் 9ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தோற்று சில வீரர்களுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் 2021 போட்டியை நிறுத்தியுள்ளனர்.

சில தினங்களுக்கு கோலத்தை நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு சில வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த போட்டியை நிறுத்திவைத்தனர்.

பின்பு அனைத்து அணிகளில் உள்ள அனைத்து வீர்ரகளுக்கும் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று நபருக்கும், சன்ரைசர்ஸ் ஐராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் பிசிசிஐ, உடனடியாக ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர். அதனால் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்கிடையே ஐபிஎல் 2021 போட்டிக்கு முன்பு ஜோஷ் ஹஸ்ட்லேவூட் க்கு பதிலாக சிஎஸ்கே அணியில் யார் இடம்பெற போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

அப்பொழுது, ஜேசன் பெரேன்டர்ஃப் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக அவர் தாமதமாக அணியில் இடம்பெற்றார். இப்பொழுது கொரோனா காரணமாக போட்டியை நிறுத்தியுள்ளனர்.

ஜேசன் பெரேன்டர்ஃப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் ஒரு போட்டியில் விளையாடவில்லை என்றாலும் சரி, நான் சென்னை அணியில் இடம்பெற்ற உடனே நான் சிஎஸ்கே அணியின் வீரர் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜேசன் பெரேன்டர்ஃப், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் மருத்துவ வசதியை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதனால் இப்பொழுது உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவி வருகின்றனர். அதேபோல ஜேசன் பெரேன்டர்ஃப் அவரது பங்குக்கு 50,000$ பிரதமர் நிதியுதவி கொடுத்துள்ளார்.

அதேபோல ஆஸ்திரேலியா அணியின் வீரரான பேட் கம்மின்ஸ், பிரட் லீ போன்ற வீர்ரகள் அவர்களால் முடிந்த நன்கொடையை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.