ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் நடைபெற வேண்டும் என்றால் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் … ! இல்லைனா நடக்காது… !!

ஐபிஎல் 2021 ; கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் தீடிரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபிஎல் 2021 போட்டிகளை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டது.

ஏன் ஐபிஎல் 2021 போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தினார் ?

மே மாத தொடக்கத்தில் சில கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் பிசிசிஐ அறிவுரை படி அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சில வீரர்களுக்கு தோற்று உறுதியானது.

அதனையடுத்து அனைத்து அணிகளில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கின்ஸ்க் அணியை சேர்ந்த 3 பேருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த 2 பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் உடனடியாக ஐபிஎல் 2021, மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் தற்காலிமாக போட்டிகளை நிறுத்தி வைத்தனர். அதுமட்டுமின்றி மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் நடைபெறுவது உறுதி…!! ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது…!

செப்டெம்பர் மாதத்தில் இறுதியில் தொடங்கி அக்டோபர் இறுதிவரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தினமும் இரு போட்டிகள் என்ற கணக்கில் மீதமுள்ள 29 போட்டிகளை நடந்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் சில வற்றை ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளது. ஆனால் ஐக்கிய அரபு நாட்டில் விளையாட வேண்டும் என்றால் அனைத்து வீரர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல தான் ஐபிஎல் வீரர்களுக்கும் அந்த கட்டுப்பாடு இருக்கும். அதாவது அனைத்து வீரர்களும் நிச்சியமாக தடுப்பூசி போட்டு கொண்டுதான் ஐக்கிய அரபு நாட்டில் விளையாட அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.