பொல்லார்ட் -ஐ வம்பிழுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ; கடுப்பான பொல்லார்ட் என்ன செய்தார் தெரியுமா ?

0

ஐபிஎல் 2022 : ஐபிஎல் போட்டிகள் இப்பொழுது நடந்து முடிந்துள்ளது. அதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தான் கோப்பையை வென்றுள்ளது. அதிலும், இந்த ஆண்டு அறிமுகம் ஆன புதிய அணி இப்படி விளையாடி கோப்பையை வென்றதா என்று பலர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அதிக முறை கோப்பை கைப்பற்ற மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு சரியான வெற்றி ஆட்டம் அமையவில்லை. அதனால் தொடர்ந்து தோல்விகளை பெற்று வந்த நிலையில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்கள்.

அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். ஏனென்றால், முஸ 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே கைப்பற்றி வந்தனர். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; ” பொல்லார்ட் -க்கு பதிலாக டேவால்டு ப்ரேவிஸ் அணியில் இடம்பெற வேண்டும். ஏன் ? மீண்டும் மீண்டும் பொல்லார்ட்-க்கு வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள் ? பொல்லார்ட் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் அவரை பவுலிங் செய்ய வைக்கப்போவதில்லை.”

“அவர் இப்பொழுது ரன்களை அடிப்பதே இல்லை, பிறகு ஏன் அவரை அணியில் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ? அதனால் எனக்கு தெரிந்து பொல்லார்ட்-யின் கிரிக்கெட் வாழ்கை அவ்வளவு தான் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. இதனை பார்த்த பொல்லார்ட் ஆவேசமாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்தவுடன் அளித்துவிட்டார்.

அதில் ” இந்த மாதிரி பேசுவதால் உங்களுக்கு ட்விட்டர் பின்பற்றுவோரின் எண்ணிக்கை கூடும், உங்கள் ரசிகர்களிடையே ஆதரவு பெருகும், இதனை அப்படியே செய்யுங்கள் என்று பொல்லார்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இது இப்பொழுது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க சொல்லுங்க பொல்லார்ட் சரியாக விளையாடவில்லையா ? இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் பொல்லார்ட் தாக்கம் இருக்குமா ? அல்லது ஆகாஷ் சோப்ரா சொன்னது சரிதானா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here