இந்த இருவர் இறுதியாக 6 ஓவர் பேட்டிங் செய்தால் 120 ரன்களை சுலபமாக அடிக்க முடியும் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்த ஆண்டு அறிமுகம் ஆன புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி தான் கோப்பையை வென்றுள்ளது. அதிலும் ஹர்டிக் பாண்டிய தான் கேப்டனாக வழிநடத்தி வந்துள்ளார்.

ஹர்டிக் பாண்டிய கம்பேக் ;

அனைத்து போட்டிகளிலும் கிரிக்கெட் வீரரால் சரியாக விளையாடுமா ? என்று கேட்டால் அது கஷ்டம் தான்..! அதுமட்டுமின்றி, ஒரு வீரருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது ஒன்று அவ்வளவு சுலபம் இல்லை. அதேபோல தான் கடந்த ஆண்டு ஹர்டிக் பாண்டியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதிலும் இருந்து ஹர்டிக் பாண்டியாவால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார் ஹர்டிக். அது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எதிர்பார்த்த படி சரியாக விளையாடவில்லை. பின்பு , நான் எப்பொழுது பவுலிங் சரியாக செய்கிறானோ, அப்பொழுது என்னை இந்திய அணியின் தேர்வு செய்யுங்கள் என்று ஹர்டிக் பாண்டியவே கூறியுள்ளார். இருப்பினும் கடந்த 4 மாதங்கள் எந்த போட்டியிலும் விளையாடாமல், வந்துள்ளார்.

பின்பு ஹர்டிக் பாண்டியவை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமனம் செய்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹர்டிக் பாண்டியாவின் விளையாட்டு இருந்தது தான் உண்மை. ஏனென்றால், 15 போட்டிகளில் விளையாடிய ஹர்டிக் 487 ரன்களை அடித்துள்ளார்.

அதேபோல பவுலிங் செய்த ஹர்டிக் மொத்தம் 8 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். புதிய அணியில் புதிய கேப்டன் பதவி பெற்று சிறப்பாக விளையாடி அணியை கோப்பையை வெல்ல வைத்துள்ளார் ஹர்டிக் பாண்டிய. அடுத்ததாக வருகின்ற ஜூன் 9ஆம் தேதி முதல் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஐந்து டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய.

அதற்கான இந்திய கிரிக்கெட் அணியை இப்பொழுதுதான் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய வீரரான கவாஸ்கர் கூறுகையில் : “இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் ஆட்டம் நிச்சியமாக இந்திய அணியிக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.”

“அதிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் 5 மற்றும் 6வது இடத்தில் விளையாட வேண்டும். அப்படி விளையாடும் போது இறுதியாக 6 ஓவரில் ( 14வது ஓவர் முதல் 20வது ஓவர் வரை) இவர்கள் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக 100 அல்லது 120 ரன்களை அடிக்க முடியும்.”

“அவர்களால் நிச்சியமாக அதனை செய்ய முடியும், அதனை செய்ய கூடிய வீரர்கள் தான். அதனை பார்க்க தான் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க சொல்லுங்க இந்திய அணியில் ஹர்டிக் பாண்டியாவின் வருகை எந்த அளவிற்கு இருக்க போகிறது ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here