இவங்க இருவரால் தான் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்ததற்கு முக்கியமான காரணம் ; ரிஷாப் பண்ட் ஓபன் டாக் ;

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா : நேற்று விஷகப்பட்டணத்தில் நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.

ஓப்பனிங் வீரர்களான ருதுராஜ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தலா 50 ரன்களை அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 179 ரன்களை அடித்தனர்.

அதில் ருதுராஜ் 57, இஷான் 54, ஷ்ரேயாஸ் ஐயர் 14, ரிஷாப் பண்ட் 6, ஹார்டிக் பாண்டிய 31, தினேஷ் கார்த்திக் 6 ரன்களை அடித்தனர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. அதில் தொடக்க வீரரான பாவுமா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதுமட்டுமின்றி, தென்னாபிரிக்கா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையாத காரணத்தால் ரன்களை அடிக்க முடியாமல் போனது. அதனால் இறுதி வரை போராடிய சவுத் ஆப்பிரிக்கா அணி 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 131 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 23, பிரிட்டோரியஸ் 20, க்ளாஸென் 29 ரன்களை அடித்துள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில் ; ” ஒவ்வொரு போட்டியிலும் பவுலர் மற்றும் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து வெற்றிகள் உறுதியாகும். எங்களுக்கு 15 ரன்கள் குறைவாக இருந்தது போல தான் தெரிந்தது.”

“இந்த போட்டியில் பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்கள் தான் (யுஸ்வேந்திர சஹால் மற்றும் அக்சர் பட்டேல்). ஏனென்றால் இவர்களது சிறப்பான பந்து வீச்சால் எதிர் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது தான் உண்மை.”

பவுலிங் செய்யும் போது தொடக்கம் சரியாக அமைந்தால் நிச்சியமாக பேட்ஸ்மேன்களுக்கு அதில் இருந்து மீண்டு வர அதிக நேரம் ஆகும். இந்த போட்டியில் நாங்கள் அதிக விக்கெட்டை இழந்துவிட்டோம். இனிவரும் போட்டிகளில் அந்த தவறை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.

இதுவரை நடந்த டி-20 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி 1 போட்டியிலும் வென்றுள்ளது. இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். தொடரை கைப்பற்றுமா இந்தியா கிரிக்கெட் அணி ??