சர்வதேச டி-20 போட்டியில் விலகிய தொடக்க வீரர் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

0

வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 22வரை இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் எதிர்கொள்ளும் முக்கியமான சவாலாக இருப்பது அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடுவது தான்.

ஒரு சில வீரர்கள் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள், மற்ற சில வீரர்கள் டி-20 போட்டியில் அதிரடியாக விளையாடுவார்கள். ஆனால் யாராலும் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவது சிரமம் தான்.

அதனால் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விலகுவதை விட இப்பொழுது டி-20 போட்டிகளில் இருந்து ஒவ்வொரு வீரர்கள் அவர்களது ஓய்வை அறிவித்து வருகின்றனர். அதேபோல தான் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான ஆரோன் பின்ச் சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய ஆரோன் பின்ச் : “என்னால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியாது. எனக்கு தெரிந்து இதுதான் சரியான தருணம் நான் டி-20 போட்டிக்கான தொடரில் இருந்து விலகுவது. ஏனென்றால் அப்பொழுது ஆஸ்திரேலியா அணியால் என்னை விட்டுவிட்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆர்வம் காட்டுவார்கள்.”

“அதுமட்டுமின்றி, என்னை இதுவரை ஆதரித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி என்று கூறியுள்ளார் ஆரோன் பின்ச்.”

சர்வதேச டி-20 போட்டியில் இருந்து மட்டும் விலகிய ஆரோன் பின்ச் இன்னும் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் பின்ச் இதுவரை 103 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி 3120 ரன்களை அடித்துள்ளார். அதில் 19 அரைசதம் மற்றும் 2 சதம் அதில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here