ரோஹித், கோலி இல்லை ; ஆஸ்திரேலியா அணிக்கு ஆபத்தாக மாறப்போகும் இந்திய வீரர் இவர் தான் ; ரவி சாஸ்திரி ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் நாளை மறுநாள் முதல் நடைபெற உள்ளது.

ravi sastri

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாகவும் பேட் கம்மின்ஸ் விளையாட போகிறார்கள்.

இது சீரியஸ் போட்டியை விட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு யார் யார் தகுதி பெறுவார்கள் என்பதை முடிவு செய்ய போகின்ற காரணத்தால் விறுவிறுப்பான போட்டியாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இருப்பினும் ப்ளேயிங் 11 தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு பல குழப்பங்கள் ஏற்படும். ஒவ்வொரு போட்டிகளில் ஒரு சிலர் வீரரால் மட்டுமே சிறப்பாக விளையாடி போட்டியில் வெல்ல முடியும் அல்லது வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ முடியும்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறுகையில் : “ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாட கூடிய வீரர் தான். அவரை அவர் போக்கில் விளையாடாவிட்டால் அதுவே போதும் என்று கூறியுள்ளார் சாஸ்திரி.”

மேலும் இதனை பற்றி பேசிய ரவி சாஸ்திரி : ” அஸ்வின் நினைத்த படி பவுலிங் மட்டும் அமைந்தால் நிச்சியமாக இந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் முடிவுகளை உருவாக்கும். உலகச்சிறந்த ப்ளேயர் தான் அஸ்வின், ஆனால் இந்தியாவில் மிகவும் ஆபத்தான வீரர் தான் அஸ்வின்.”

“பால் மட்டும் சூழல் பந்தாக அமைந்தால், நிச்சியமாக ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தாக அமையும். அதனால் அஸ்வின் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். அவரை அவர் போக்கில் விளையாட வையுங்கள். மூன்றாவது பவுலராக நான் குல்தீப் யாதவை விளையாட வைக்க ஆசைப்படுறேன்.”

“ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் ஒரே மாதிரி தான் பவுலிங் செய்து வருகின்றனர். ஆனால் குல்தீப் யாதவ் மாற்று விதமாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றுவார். அதுமட்டுமின்றி, குல்தீப் யாதவ் நினைத்தால் நிச்சியமாக முதல் நாளில் விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here