இந்த பையன மிஸ் பண்ணிராதீங்க ; விராட்கோலி-க்கு இவர் தான் மாற்று வீரர் ; தயவு செய்து USE பண்ணிக்கோங்க ;

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயா மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தான் இரு தொடரில் வென்றுள்ளனர்.

இருப்பினும் சமீபத்தில் அறிமுகம் ஆன இந்திய வீரர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் சிறப்பாகவும் எந்த பயமும் இல்லாமல் விளையாடியுள்ளார். அதனால் இந்திய அணிக்கு வலுவான மிடில் ஆர்டர் அமைந்துள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியின் சுருக்கம்:

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். தொடக்க வீரரான இஷான் கிஷான் 1 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் ராகுல் த்ரிபதி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 234 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு ம்,மோசம் தான் மிஞ்சியது.

ஆமாம், தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வந்த நியூஸிலாந்து அணி 12.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 66 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

இந்த போட்டியில் தொடக்க வீரரான இஷான் கிஷான் ஆட்டம் இழந்தார். பின்பு களமிறங்கிய ராகுல் த்ரிபதி எந்த பயமும் இல்லாமல் சுப்மன் கில் -க்கு சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமைத்து கொடுத்தார் (ராகுல் த்ரிபதி). 22 பந்தில் 44 ரன்களை அடித்துள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ” எப்படிப்பட்ட போட்டியாக இருந்தாலும், எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் ராகுல் த்ரிபதி போன்ற ஒரு வீரர் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவை. அவர் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம்.”

“இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அதில் ராகுல் த்ரிபதி சிறப்பாக விளையாடலாம், அல்லது மோசமான ஐபிஎல் போட்டியாக கூட இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு 3வது இடம் மிகவும் சரியான ஒன்று.”

“அந்த இடத்தில் விராட்கோலி விளையாட நினைத்தால் சரி, அப்படி இல்லையென்றால் ராகுல் த்ரிபதி -க்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்ற வீரர் யார் சிறப்பாக விளையாடிருந்தாலும், இவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு எந்த பயமும் இல்லாமல், அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தார்.”

“எனக்கு தெரிந்து அவருக்காக விளையாடாமல், அணிக்காக ரன்களை அடித்த வீரர் தான் ராகுல் த்ரிபதி என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.” இதுவரை 5 சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் 97 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here