INDIA Vs ENGLAND 2021: நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பௌலிங் தேர்வு செய்தனர். முதலில் களம் இறங்கியா இங்கிலாந்து அணியின் வீரர்கள் 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்து 165 என்ற இலக்கை இந்தியா கிரிக்கெட் அணிக்கு வைத்துள்ளனர்.
165 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கியா இந்தியா அணியின் வீரர் இஷான் கிஷன் 56 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்,ஆனால் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி 73 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இந்தியா அணியை வெற்றியடைய செய்தார். இதனால் இப்பொழுது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளனர் இரு அணியினரும்.
போட்டி முடிந்த பிறகு விராட் கோலி அளித்த பேட்டி : அவர்கள் பேட்டிங் செய்யும்போது இறுதி 5 ஒவரில் வெறும் 34 ரன்களை மட்டுமே அவர்கள் எடுத்துள்ளனர். இறுதி நேரத்தில் அதனை நங்கள் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளோம். வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பௌலிங் செய்துள்ளார். இஷான் கிஷன் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் போது அவருக்கு ஒருதுளி கூட பயம் என்பது ஒன்று இருக்கவே இருக்காது. இன்று இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டியாகும் , இதில் நிச்சயம் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். அதுமட்டுமின்றி நன் என் அணிக்காக எப்பொழுது விளையாடும் பொழுதும் மிகவும் பெருமைப்படுவேன்.
என்னுடைய இரு கண்களும் எதிரணியில் வீசப்படும் பந்தில் இருக்க வேண்டும். அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் என்னுடைய மனைவி இங்குதான் உள்ளார் ,அவர் நிறைய அறிவுரை எனக்கு கூறுவார். இந்த போட்டிக்கு முன்பு நான் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் அவருக்கு நான் சாட் செய்தேன். அதற்கு அவர் என்னை எதிர் வரும் பந்தை பார்க்க சொன்னார் என்று இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறினார்.