நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 17.5 ஓவரில் இங்கிலாந்து அணியை வென்றது இந்தியா. முதல் டி-20 போட்டியில் அர்ச்சர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார், அதனால் இந்தியா அணி முதல் டி-20 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால் இரண்டாவது டி-20 போட்டியில் தவானுக்கு பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். 165 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கியா இந்தியா கிரிக்கெட் அணி, கே.எல்.ராகுல் எந்த ரன்களையும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய இஷான் கிஷான் 32 பந்தில் 56 ரன்களை எடுத்துள்ளார். அதிலும் ஜோப்பிர அர்ச்சரின் பந்து வீச்சை சமாளித்து, நல்ல ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின்னர் இஷான் கிஷான் விக்கெட் இழந்த பிறகு விராட் கோலி 73 ரன்கள் அடித்து இந்தியா கிரிக்கெட் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார். 17.5 ஓவர் முடிவில் இந்தியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. போட்டிக்கு பிறகு அதிரடியாக அரை சதம் அடித்த இஷான் கிஷானிடம் சில கேள்விகள் அளிக்கப்பட்டது.
அதிலும் எப்படி நீங்க ஜோப்பிர அர்ச்சர் பந்தை சமாளித்து நல்ல ரன்களை எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த இஷான்: நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சி செய்யும்போது ட்ரெண்ட் பெல்ட், பும்ரா போன்ற வீரர்களின் பந்து வீச்சை நான் கவனித்துள்ளேன். அதனால் இது எனக்கு அவளோ ஒன்னு கஷ்டமாக இல்லை என்று இஷான் கிஷான் கூறியுள்ளார். அடுத்த 3வது டி-20 போட்டி நாளை 7 மணிக்கு அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.