அன்று ZERO இன்று HERO ; இவரை சிறப்பான பேட்ஸ்மேன்னாக உருவாக்கியது நான்தான் ; ரிக்கி பாண்டிங் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற இருக்கிறது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வென்று நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்திய.

அதற்கு முக்கியமான காரணம் இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தான். அதிலும் இப்பொழுது யார் இந்திய அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டர் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

ஆமாம், ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவருடைய விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தொடரில் அக்சர் பட்டேலின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடிய அக்சர் பட்டேல் 84, 74, 12*, 15*, 79 ரன்களை அடித்துள்ளார்.

ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கூட இந்த அளவிற்கு ரன்களை அடிக்காத நிலையில் அக்சர் பட்டேலின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதுமட்டுமின்றி, பவுலிங் செய்து 3 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

நான் தான் அக்சர் பட்டேல் -ஐ (டெல்லி கேபிட்டல்ஸ்) ஒரு பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்.

மேலும் இதனை பற்றி பேசிய ரிக்கி பாண்டிங் கூறுகையில் : “எனக்கு நீண்ட நாட்களாகவே அக்சர் பட்டேலை தெரியும். நான் அவர் இளம் வயதில் மும்பையில் இருக்கும்போது முதலில் பார்த்தேன்.”

“அப்பொழுதே எனக்கு நன்கு தெரியும் அக்சர் பட்டேலிடம் பேட்டிங் திறமை இருக்கிறது என்று. அப்படி இருந்தும் கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் சர்வதேச போட்டிகளிலும் அதனை வெளிப்படுத்தவே இல்லை.”

“பின்பு நான் அவருக்கு சில விளையாட்டு நுட்பத்தை கற்றுக்கொடுத்தேன். அதில் இருந்து அவர் (அக்சர் பட்டேல்) சுலபமாக பேட்டிங் செய்ய தொடங்கினார். அருமையான ஆஃப் -சைடு வீரர் தான் அக்சர் பட்டேல் என்று கூறியுள்ளார் அக்சர் பட்டேல்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here