முக்கியமான ஆல் – ரவுண்டருடன் களமிறங்க போகும் இந்திய அணியின் அசத்தலான ப்ளேயிங் 11 இதுதான் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் ஒரு வழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதனை தொடர்ந்து நாளை மதியம் முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற இருக்கிறது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சில முன்னணி வீரர்கள் ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் நிச்சியமாக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் 11 விவரம் இதோ :

சுப்மன் கில், இஷான் கிஷான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், முகமத் ஷமி, குல்தீப் யாதவ், முகமத் சிராஜ்.

இளம் வீரரான இஷான் கிஷான், ஹர்டிக் பாண்டிய,குல்தீப் யாதவ், ஷர்டுல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி சற்று வலுவாக இருக்கிறது.

சமீப காலமாகவே தொடக்க வீரராக சுப்மன் கில் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி ரன்களை குவித்துவருகிறார். அதேபோல இளம் வீரராக இஷான் கிஷான் கடந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் 210 (இரட்டை சதம்) அடித்துள்ளார்.

அதனால் ரோஹித் சர்மா அணியில் இல்லாதது பெரிய இழப்பாக இருக்காது என்று தெரிகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here