நானும் தோனியும் இதை பற்றி தான் பேசினோம் ; தோனி இடத்தில் இருந்து இவர் சிறப்பாக விளையாடுகிறார் ; கங்குலி ஓபன் டாக் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்து விளங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் சிறப்பாக உருவெடுத்தது. பின்பு தோனி அதனை சரியாக பயன்படுத்தி ஐசிசி தொடரில் பல கோப்பைகளை வெல்ல முக்கியமான காரணமாக திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி.

சமீபத்தில் இந்திய அணியின் கேப்டனான கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் ஒன்றாக சந்தித்து கொண்டனர். அதன் புகைப்படும் இணையத்தில் வைரலாக பரவியது.

பின்பு பேட்டி கொடுத்த கங்குலி : “தோனியை பற்றி பேசும்போது அவர் விளையாடிய போட்டிகளை மட்டும் பேசமாட்டோம். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் அவர் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு தான் நானும் (கங்குலி) மற்றும் தோனி ஒரு ஷூட்டிங்-காக நேரத்தில் சந்தித்து பேசினோம்.”

“ரஞ்சியில் இருந்து வந்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கேப்டனாக பதவி பெற்று, ஐசிசி கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். அதாவது மற்ற வீரர்கள் யாரும் செய்யாத விஷயங்களை தோனி செய்துள்ளார். இவர் தான் உண்மையான சாம்பியன்.”

“எனக்கு உண்மையிலும் பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் கிரிக்கெட் போட்டியே ஒன்றும் இல்லை என்று நம்பிக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து இரு முக்கியமான வீரர்கள் வெற்றியாளராக மாறியுள்ளனர். அதில் ஒருவர் தான் மகேந்திர சிங் தோனி. அவர் (தோனி) உண்மையிலும் இளம் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். அதேபோல தான் இஷான் கிஷானும் எப்படியெல்லாம் விளையாடுகிறார் பாருங்கள் என்று கூறியுள்ளார் கங்குலி.”

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வெல்ல காரணமாக திகழ்ந்துள்ளார். தோனி பிறந்த ஜார்கண்ட்-ல் இருந்து தான் இளம் வீரரான இஷான் கிஷான் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பட்டைய கிளப்பி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.