ரோஹித் இல்லை ; இந்த பையனை மட்டும் தொடக்க வீரராக விளையாட வைத்தால் நிச்சியமாக ஆஸ்திரேலியா அணியை வென்று விடலாம் : ஹர்பஜன் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் நாளை முதல் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடரும் பிரச்சனை :

கடந்த பல மாதங்களாகவே இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக யார் காமிறங்கிய போகிறார் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. ரோஹித் சர்மா உறுதியானாலும் அவருடன் பார்ட்னெர்ஷிப் செய்ய போகும் வீரர் யார் ?

ஒவ்வொரு போட்டியிலும் தொடக்க வீரர்கள் மாறிக்கொண்டே வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் அல்லது ஷிகர் தவான். டி-20 போட்டியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் போன்ற வீரர்கள் சமீபத்தில் தொடக்க வீரராக விளையாடி வருகின்றனர்.

ஆனால் டெஸ்ட் போட்டியில் யார் இடம்பெற போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் இளம் வீரரான சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : “ஒரு போட்டியில் தொடக்க வீரர்களின் பார்ட்னெர்ஷிப் மிகவும் முக்கியமான ஒன்று. தொடக்கத்தை சிறப்பாக விளையாடினால் தான் சீரியஸ் தொடர் சிறப்பாக அமையும். என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா சீரியஸ் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்கள் விளையாட வேண்டும்.”

“போர்மில் சிறப்பாக விளையாடி வருகிறார் சுப்மன் கில். கே.எல்.ராகுல் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடினாலும், சமீப காலமாக விளையாடாமல் தவித்து வருகிறார். அதனால் சுப்மன் கில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, சமீபத்தில் சுப்மன் கில் பல சாதனைகளை செய்துள்ளார்.”

“ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டுமென்று நினைத்தால் சுப்மன் கில் தான் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். ஒரு போட்டியில் மட்டுமின்றி, இந்த சீரியஸ் தொடரில் அனைத்தும் போட்டிகளிலும் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.”

ஹர்பஜன் சிங் சொன்னது போல் இந்திய அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் இடம்பெற்றால் இந்திய கிரிக்கெட் அணியால் வெல்ல முடியுமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here