இந்த award என்னை விட இவருக்கு தான் இது பொருந்தும் ; குல்தீப் யாதவ் பேட்டி ;

நேற்று நடந்த 32 வது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய போவதாக முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் 20 ஓவர் வரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 24, ஜிதேஷ் சர்மா 32, ஷாருக்கான் 12, ராகுல் சஹார் 12 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. எதிர்பார்த்த படியே 10.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 119 ரன்களை அடித்தனர்.

அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதில் ப்ரித்வி ஷாவ் 41, டேவிட் வார்னர் 60 ரன்களை அடித்துள்ளனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளது..!

போட்டி முடிந்த பிறகு பேசிய டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறுகையில் ; “என்னை விட இந்த விருதை நான் அக்சர் பட்டேலுக்கு கொடுக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.”

” அதுவும் மிடில் ஓவரில் சிறப்பாக பவுலிங் செய்து ஆட்டத்தை மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, ராபடுவுக்கு எதிராக பல போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். எப்பொழுதும் அவர் பேட்டிங் செய்யும்போது கால்களை நகற்றவே மாட்டார். அதனால் அவருக்கு கூகுலி பவுலிங் செய்ய முடிவு செய்தேன்.”

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் எனக்கு நல்ல மனநிலை உருவாகியுள்ளது தான் உண்மை. நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைகின்றானோ, அதனை சரியாக செய்து வருகிறேன். ஒரு கேப்டனாக ரிஷாப் பண்ட் எப்பொழுதும் எனக்கு ஆதரவாகவே உள்ளார் என்று கூறியுள்ளார் குல்தீப்.

4 ஓவர் பந்து வீசிய 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் தான் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை கொடுத்துள்ளனர். இருப்பினும், அக்சர் பட்டேல் அதேபோல 4 ஓவர் பவுலிங் செய்து வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து, குல்தீப் போலவே 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார், ஆனால் விருதை குல்தீப் யதாவுக்கு கொடுத்தது அதிர்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.