CSK அணியின் தொடக்க வீரர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினார் ; குழப்பத்தில் இருக்கும் CSK அணி ?

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 32 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது தான் உண்மை.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்ற சென்னை மற்றும் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியலில் இறுதி இடங்களில் உள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் இனிவரும் போட்டிகள் நிச்சியமாக சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.

இதற்கிடையில், சென்னை அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே-க்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க உள்ளதால் அவரால் ஊருக்கு செல்ல வேண்டிய நிலையி, ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் சென்னை அணியில் இணைந்து விடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தான் டேவன் கான்வே சென்னை அணியால் 2 கோடி விலை கொடுத்து கைப்பற்றப்பட்ட வீரர். அவர் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதனால் நிச்சியமாக சென்னை அணிக்கு எந்த பின்னடைவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஆனால் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு காயம் ஏற்பட்டால் நிச்சயமாக மாற்று ஆளாக டேவன் கான்வே மட்டுமே உள்ளார் என்பதை மறந்துவிட முடியாது. வெறும் ஒரு போட்டியில் விளையாடியதை வைத்து ஒரு வீரரை குறைத்து இடை போடா முடியாது.

சென்னை அணிக்கு இனிவரும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. இன்னும் மீதமுள்ள 8 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் பிரச்சனை கிடையாது. ஆனால் இரு போட்டிகளில் தோல்வியை பெற்றால் ப்ளே – ஆஃப் என்பது கவனாக மாறிவிடும் என்பது தான் உண்மை.