மும்பை இந்தியன்ஸ் அணி செய்த முதல் தவறே..! இவரை அணியில் எடுத்தது தான் ; ஷேன் வாட்சன்

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மார்ச் 26ஆம் தேதியில் தொடங்கிய ஐபிஎல் டி-2022 போட்டிகள் இதுவரை 26 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை அதிக முறை சாம்பியன் படத்தை வென்ற சென்னை , மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிபட்டியலில் கீழே உள்ளனர். ஆமாம், இது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை. இருப்பினும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி திணறிக்கொண்டு வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி பல அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் ஆஸ்திரேலியா மற்றும் சென்னை அணி முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ” மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியலில் இறுதியில் இருப்பது எனக்கு ஒன்றும் ஆச்சரியமாக இல்லை.”

“ஏனென்றால் ஐபிஎல் 2022யின் மெகா ஏலத்தில் அவர்கள் செய்த விஷயம் அப்படி. ஆமாம், இஷான் கிஷனை கைப்பற்ற அதிக விலை கொடுத்து வாங்கியது சரியாக தோன்றவில்லை. ஏனென்றால் அவர் பவுலிங் ஒன்றும் செய்யப்போவதில்லை, வெறும் பேட்டிங் மட்டும் தான்.”

“இஷான் கிஷான் திறமையான பேட்ஸ்மேன் தான், ஆனால் பவுலிங் இருந்திருந்து இந்த விலை கொடுத்திருந்தால் நல்ல ஒரு மாற்றம் இருந்திருக்கும். அதேபோல தான் ஆர்ச்சர், அவர் இதற்குமேல் விளையாடுவாரா ? இல்லையா ?? என்பதை பற்றி எதுவும் தெரியாமல், அவரை ஐபிஎல் 2022 ஏலத்தில் எடுத்து கைப்பற்றி வைத்தது சரியாக தோன்றவில்லை.”

“ஏனென்றால் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர், ஒவ்வொரு ஆண்டும் விளையாடுவாரா என்று கேட்டால் அது சாத்தியம் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரு முடிவுகளை தவறாக எடுத்தது தான் தோல்விக்கு முக்கியமான காரணமாக நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ஷேன் வாட்சன்.”

கடந்த ஆண்டு இறுதியில் இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார் இஷான் கிஷான். அதனை பார்த்த ரோஹித் சர்மா, இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று நம்பி இந்திய அணியிலும் களமிறங்க வைத்தார்.

ஆனால் இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. இதுவரை 6 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இஷான் கிஷான், 191 ரன்களை அடித்துள்ளார். ரோஹித் சர்மா 114 ரன்களை அடித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!