அடுத்த உலகக்கோப்பை போட்டியில் இவர்களுது முகத்தை பார்க்கவே கூடாது ; சேவாக் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நடந்து முடிந்து இரு தினங்கள் ஆகிய நிலையில் இன்னும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அப்படி என்ன தான் நடந்தது ?

போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் டார்கெட் வைக்க முடிவு செய்த இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்க ஆட்டம் அமையவில்லை. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலின் மிதமான ஆட்டத்தால் முதல் 10 ஓவர் 60 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய. ஆனால், விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் பார்ட்னெர்ஷிப் தான் இந்திய அணிக்கு 100க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார்கள்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 168 ரன்களை அடித்தனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி. எப்படியாவது முதல் நான்கு விக்கெட்டை கைப்பற்றினால் போட்டியில் வென்றுவிடாமல் என்று நினைத்து கொண்டு இருந்த இந்திய அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில் ரன்களை குவித்தனர்.

ஒருவிக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் பவுலிங்கில் சொதப்பியது இந்திய. அதனால் 170 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தோல்வி இப்பொழுது உலகம் முழுவதும் பேசும்பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று பல முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் போன்ற அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரராக சேவாக் பேட்டி :

இந்த உலகக்கோப்பை போட்டியில் செய்த தவறை திருத்தி கொண்டு அடுத்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். இதனை பற்றி பேசிய சேவாக் கூறுகையில் ; “வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் அடுத்த போட்டிகளில் வீரர்களின் மாற்றத்தை பார்க்க ஆசைப்படுகிறேன். அடுத்த உலககோப்பைக்கு போட்டியில் ஒரு சில வீரர்களின் முகத்தை மீண்டும் பார்க்க கூடாது. கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் அதிகமான இளம் வீரர்கள் தான் விளையாடினார்கள், அதுவும் எந்த விதமான அனுபவமும் இல்லாமல்.”

“அதேபோல தான் அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை காண ஆசைப்படுகிறேன். ஏனென்றால், அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கமாட்டார்கள். அதுதான் இந்திய அணியின் எதிர்கால அணியாக இருக்கும் என்று கூறியுள்ளார் சேவாக்.”

மேலும் அடுத்த உலகக்கோப்பை பற்றி பேசிய சேவாக்: ” இந்திய அணியின் எதிர்காலத்தை நினைத்தால் இன்னும் இரு ஆண்டுகளில் சரியான அணியை உருவாக்க வேண்டும். அதனால் விளையாட எந்த விதமான சீனியர் வீரர்களும் அணியில் இடம்பெற கூடாது, அதனை நான் விரும்பவில்லை. இதனை நிச்சியமாக அணியின் தேர்வாளர்கள் சரியாக முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறன். ஆனால் எப்பொழுதும் ஒரே தேர்வாளர்கள் குழு ஆ? இருக்க போகிறது ? இல்லை. ஆனால் ஒன்று இதே அணி அடுத்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடினால், இதே முடிவுகள் தான் கிடைக்கும் என்று உறுதியாக கூறியுள்ளார் சேவாக்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here