விடைபெற்றுவிட்டாரா ராகுல் டிராவிட் ; புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது பிசிசிஐ ; குழப்பத்தில் ரசிகர்கள் ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி பேசும் பொருளாக மாறியுள்ளது. ஆமாம், இந்த முறை இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என்று நினைத்து கொண்டு இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றம் :

இறுதி தினங்களுக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்களை அடித்தனர். பின்பு வெறும் 16 ஓவரில் 170 ரன்களை அடித்த இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வீணாக போய்விட்டது ;

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றனர். அதனால் இந்த காம்போ நிச்சியமாக இந்திய அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து கொண்டு இருந்தனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சாரம் இதுவரை மொத்தம் 5 முறை கோப்பையை வெல்ல அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணியையும் சிறப்பாக வழிநடத்தி டி-20 உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருப்பார் என்று நினைத்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி, அணியை தேர்வு செய்வதில் ராகுல் டிராவிடின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லாதது போல தெரிகிறது.

கேப்டன் மாற்றம் :

டி-20 உலகக்கோப்பை நடந்து முடிந்த நிலையில் வருகின்ற 18ஆம் தேதி முதல் நியூஸிலாந்து அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளனர். அதில் மொத்தம் மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதற்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டுள்ளனர். அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கும் ஓய்வு கொடுக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் (ஒருநாள்), ஹர்டிக் பாண்டியாவும் (டி-20) மற்றும் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் -ன் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமையுமா ? இல்லையா ?