இந்திய அணி கிட்ட இதை செய்திருக்கலாம் ; ஆனால் எங்கள் பாகிஸ்தான் அணி கிட்ட ஒன்னும் பண்ண முடியாது ; இன்சமாம் உல் ஹக் பேட்டி ;

0

மெல்போர்ன் : நாளை மதியம் 1:30 மணியளவில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இறுதி போட்டி என்றதால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி வெளியேறிய விவரம் :

சூப்பர் 12ல் குரூப் 2ஐ சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி லீக் போட்டிகளில் 5ல் 4 போட்டியில் வென்றது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து ஒரு விக்கெட்டை கூட காய் பற்ற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங் தான் காரணம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்களை அடிக்காதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையும் பட்சத்தில் அணியை வெற்றி பாதைக்கு சுலபமாக கொண்டு செல்ல முடியும். உதாரணத்திற்கு இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டி தான். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் மாற்றம் ஹேல்ஸ் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து விக்கெட்டை இழக்காமல் 16 ஓவரில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்திய அணி தோல்வி பெற்ற நிலையில் இனிவரும் போட்டிகளில் பல மாற்றங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட்கோலி, ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார், ஷமி போன்ற வீரர்கள் 30 வயதை தாண்டிய நிலையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்திய அணியில் ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக அறிவிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் வீரரின் பேட்டி :

இந்திய அணியின் தோல்வியை குறித்து பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக் முக்கியமான கருத்தை கூறியுள்ளார். அதில் “பெரிய போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய அளவில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனை ஆசிய கோப்பை போட்டியிலேயே பார்த்தோம். அதேபோல, சும்மா சொல்ல கூடாது ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் அற்புதமாக ரன்களை விளாசியுள்ளனர். ஆனால் இறுதி போட்டியில் இந்திய அணியின் பவுலிங் போல எங்கள் (பாகிஸ்தான்) அணியின் பவுலிங் இருக்காது. அதனால் அவர்கள் (ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ்) பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடிக்க முடியாது என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here