தோல்விக்கு முக்கியமான காரணம் இவங்க ; கொஞ்சம் ரன்களை அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

நேற்று மதியம் நடைபெற்ற போட்டியில் லிண்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் முதல் ஒருநாள் போட்டியில் மோதின.

அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் மோசமான நிலைக்கு சென்றது, வழக்கம் போலவே. விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமும் இந்திய அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து கொண்டே வந்த இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 186 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73, ரோஹித் சர்மா 27, ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தீரில் வெற்றி காத்திருந்தது. தொடக்க வீரரான ஹொசைன் சாண்டோ எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். ஆனால் அதன்பின்னர் விளையாடிய அனைத்து வீரர்களும் சிறிது ரன்களை அடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ள நிலையில் பங்களாதேஷ் அணியின் பவுலர் மெஹிடி சிறப்பாக விளையாடிய நிதானமாக ரன்களை அடித்தார்.

அதனால் 46 ஓவர் முடிவில் 187 ரன்களை அடித்த பங்களாதேஷ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. அதுமட்டுமின்றி 1 – 0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் இருக்கிறது.

தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன்:

“கிட்டத்தட்ட இறுதிவரை நெருங்கிவிட்டோம். முதலில் சொதப்பினாலும் இறுதி நேரத்தில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளோம். நாங்க சரியாக பேட்டிங் செய்யவில்லை, 184 ரன்கள் மிகவும் குறைவான ஒன்று தான். இருந்தாலும் பவுலிங்கில் பட்டைய கிளப்பிவிட்டோம். அதனால் அவர்களுக்கு இறுதிவரை கொஞ்சம் பயமாக தான் இருந்திருக்கும்.

எங்களுடைய (இந்தியா) பவுலிங்-கை நீங்க பார்த்த சிறப்பாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக முதல் 40 ஓவர் முடிவுவரை சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டையும் கைப்பற்றினோம். பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை. ஒருவேளை 25 அல்லது 30 ரன்கள் சேர்த்து அடித்திருந்தால் நிச்சியமாக எதிர் அணிக்கு சவாலாக இருந்திருக்கும். நாங்க 25 ஓவருக்கு பிறகு 240 அல்லது 250 ரன்களை எதிர்பார்த்தோம். இன்னும் சில வீரர்களுக்கு இறுதி நேரத்தில் எப்படி அழுத்தத்தை கையால வேண்டுமென்று நன்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதனை கற்றுக்கொண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”